24 667f7cfe0ff26 33
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள்: நாமல் வெளியிட்ட அறிவிப்பு

Share

விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள்: நாமல் வெளியிட்ட அறிவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கப்பட்டமை குறித்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் இடம்பெற்ற கட்சி மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Santhirakanthan) எனப்படும் பிள்ளையான் கூறியது போன்று எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருந்தால் அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) , நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...