7 31
இலங்கைசெய்திகள்

கூட்டிணையும் முன்னாள் ஜனாதிபதிகளின் வாரிசுகள்..

Share

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனான தஹாம் சிறிசேனவை தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு தஹாம் சிறிசேனவை, நாமல் ராஜபக்ச அழைத்துள்ளார்.

முந்தைய தேர்தல்களிலும், தஹாம் சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டார்.

வலுவான அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதே இதன் நோக்கம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்து தஹாம் சிறிசேன இன்னும் எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை, மேலும் எதிர்காலத்தில் அவர் இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் பத்தரமுல்லையில் போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்னால் நடைபெற்ற போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் நாமல் ராஜபக்ச மற்றும் தஹாம் சிறிசேன ஆகியோர் இணைந்து கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
202002060432067433 Director Gowthaman held for attempt to protest consecration SECVPF
செய்திகள்இந்தியா

திருமலை புத்தர் சிலை விவகாரம்: அநுரகுமார திசாநாயக்க ராஜபக்ச, ரணில் வழியில் பயணிக்கிறாரா? – இயக்குநர் வ.கௌதமன் காட்டம்!

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்ட பின், அதை மீண்டும் அதே இடத்தில்...

25 691b53209a165
செய்திகள்இலங்கை

பௌத்தத்தை அழித்து ஈழம் அமைக்கிறதா அரசாங்கம்? – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஆவேசம்! மகாநாயக்க தேரர்களுக்கு முக்கிய கோரிக்கை!

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலையை அகற்றியமை தொடர்பாக, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்கள்...

images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...