24 66b7236589fb7
இலங்கைசெய்திகள்

சுமந்திரன் நாமல் திடீர் சந்திப்பு

Share

சுமந்திரன் நாமல் திடீர் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச வெற்றி பெற்றால் வடக்கு, கிழக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரியவந்துள்ளது.

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்துறை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட தயார் என நாமல், சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுடன் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக நாமல் இதன்போது உறுதியளித்துள்ளார்.

தேர்தலில் வெற்றியடைந்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஒன்று உறுதி செய்யப்படும் என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்த தான் விரும்புவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து குறைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு நாமல் கேட்டுக்கொண்டதாக காசிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...