தேரேறி காட்சிகொடுத்தார் நல்லூர் முருகன்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழமையாகக் கலந்துகொள்ளும் நிலையில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட திருவிழாவில் தேர் உற்சவம் நடைபெற்றுள்ளது.

ஆலய விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று உள்வீதியில் அந்தணர்களின் வேதங்கள் ஒலிக்க சிறிய ரக ரதத்தில் முருகப் பெருமான் உள்பிரகாரத்தில் காலை 7 மணிக்கு வலம் வந்தார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலையில் நல்லூர் உற்சவத்தை தரிசிக்க அடியவர்கள் வருவதைத் தடுக்க ஆலய வெளிவளாகத்தில் நூற்றுக்கும் அதிகமான பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பக்தர்கள் இணையவழியில் முருகப் பெருமனை தரிசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

an555

 

Exit mobile version