14 24
இலங்கைசெய்திகள்

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம்! வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை

Share

அண்மையில் நல்லூர் முன் வீதியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தை அகற்றுவது தொடர்பில் தமிழ்ச் சைவ பேரவையின் அழைப்பின் பெயரில் சைவ அமைப்புக்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று மாலை 6.30 மணியளவில் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23.05.2025) சைவ அமைப்புக்கள் மற்றும் ஆதீனங்கள், குருமார் ஒன்றியங்கள், ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் வடமாகாண ஆளுநரை சந்தித்து குறித்த அசைவக் கடையினை அகற்றுவது தொடர்பில் மனு ஒன்றை கையளிப்பது என இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள விரும்பும் அமைப்புக்கள் அல்லது ஆதரவு தெரிவிக்க விரும்பும் அமைப்புக்கள் வியாழக்கிழமை நள்ளிரவிற்கு முன்னர் 0770756333 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...

000 372X6VF
உலகம்செய்திகள்

ரஷ்யா-யுக்ரைன் போர்: அமெரிக்காவின் அமைதித் திட்டப் பேச்சுவார்த்தையில் பாரிய முன்னேற்றம்!

ரஷ்யா மற்றும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்கான...

12628814 airport
உலகம்செய்திகள்

நெதர்லாந்து விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் அச்சுறுத்தல்: விமான சேவை தடை!

ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள்...

Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...