அண்மையில் நல்லூர் முன் வீதியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தை அகற்றுவது தொடர்பில் தமிழ்ச் சைவ பேரவையின் அழைப்பின் பெயரில் சைவ அமைப்புக்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று மாலை 6.30 மணியளவில் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23.05.2025) சைவ அமைப்புக்கள் மற்றும் ஆதீனங்கள், குருமார் ஒன்றியங்கள், ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் வடமாகாண ஆளுநரை சந்தித்து குறித்த அசைவக் கடையினை அகற்றுவது தொடர்பில் மனு ஒன்றை கையளிப்பது என இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள விரும்பும் அமைப்புக்கள் அல்லது ஆதரவு தெரிவிக்க விரும்பும் அமைப்புக்கள் வியாழக்கிழமை நள்ளிரவிற்கு முன்னர் 0770756333 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.