நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது.

கொடியேற்ற நிகழ்வுக்காக கொடிசீலை கையளிக்கும் நிகழ்வை முன்னிட்டு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து சிறு தேரில் கொடிசீலை நல்லூர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

DSC 6721

#SriLankaNews

 

 

Exit mobile version