நல்லூர் கந்தசுவாமி மகோற்சவத்தின்ஒருமுகத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான ஒருமுகத் திருவிழா இன்று(23) மாலை நடைபெற்றது.

மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து வேல் பெருமான் பெரிய குதிரை வாகனத்திலும் , வள்ளி , தெய்வானை தலா மூன்று குதிரைகள் பூட்டிய இரு குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பரத் திருவிழா நாளை புதன்கிழமையும்(24) தேர்த்திருவிழா வியாழக்கிழமையும் (25) வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் நாளை புதன்கிழமை காலை 7 மணி முதல் இடம்பெறவுள்ளது.

IMG 20220823 WA0107

#SriLankaNews

Exit mobile version