tamilni 252 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இடை நிறுத்தப்படவுள்ள நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை

Share

இடை நிறுத்தப்படவுள்ள நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை முதல் இடைநிறுத்தப்படுகின்றது.மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை கடந்த 10 ஆம் திகதி முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திகதியில் கப்பல் சேவை தொடங்கப்படவில்லை.

நிர்வாக காரணங்களால் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், 12ஆம் திகதி காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த திகதியிலும் கப்பல் சேவை இயக்கப்படாமல் 14 ஆம் திகதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையைத் ஆரம்பித்து வைத்தனர்.

அதன் பிறகு காலை 8.15 மணியளவில் 50 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நோக்கிக் கப்பல் புறப்பட்டது

காங்கேசந்துறையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு 29 பயணிகளுடன் புறப்பட்டு வந்த கப்பல் நாகை துறைமுகத்தை மாலை 5.15 மணிக்கு வந்தடைந்தது.

அடுத்த நாள் கப்பலில் பயணம் செய்ய வெறும் 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால் கப்பல் சேவை இரத்துச் செய்யப்பட்டது.

இந்தநிலையில், நாளை 20 ஆம் திகதியுடன் நாகை – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மீண்டும் கப்பல் சேவை ஜனவரி மாதம் முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் நிறுத்தத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
08 4
செய்திகள்உலகம்

பஹ்ரைனில் ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதரகம் குடிமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

ஈரானிலிருந்து பஹ்ரைன் மீது ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில்,...

07 3
செய்திகள்இலங்கை

அரச ஊழியர்களுக்கான சொத்துக் கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கமைய, அரச உத்தியோகத்தர்களுக்கான சொத்துக் கடன் எல்லையை...

06 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பில்லை – கூட்டுத்தாபனம் அறிவிப்பு

மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகியுள்ள போதிலும், இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது...

05 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் மாயம்!

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். மீன்பிடிக்கச்...