tamilni 252 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இடை நிறுத்தப்படவுள்ள நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை

Share

இடை நிறுத்தப்படவுள்ள நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை முதல் இடைநிறுத்தப்படுகின்றது.மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை கடந்த 10 ஆம் திகதி முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திகதியில் கப்பல் சேவை தொடங்கப்படவில்லை.

நிர்வாக காரணங்களால் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், 12ஆம் திகதி காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த திகதியிலும் கப்பல் சேவை இயக்கப்படாமல் 14 ஆம் திகதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையைத் ஆரம்பித்து வைத்தனர்.

அதன் பிறகு காலை 8.15 மணியளவில் 50 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நோக்கிக் கப்பல் புறப்பட்டது

காங்கேசந்துறையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு 29 பயணிகளுடன் புறப்பட்டு வந்த கப்பல் நாகை துறைமுகத்தை மாலை 5.15 மணிக்கு வந்தடைந்தது.

அடுத்த நாள் கப்பலில் பயணம் செய்ய வெறும் 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால் கப்பல் சேவை இரத்துச் செய்யப்பட்டது.

இந்தநிலையில், நாளை 20 ஆம் திகதியுடன் நாகை – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மீண்டும் கப்பல் சேவை ஜனவரி மாதம் முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் நிறுத்தத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...