சிறுவர்களிடையே மர்ம வைரஸ்!!

fever causes virus bacteria

அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று சிறுவர்களிடையே தற்போது அதிகமாக பரவி வருவதாக சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின்  குழந்தை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.

வழக்கமான குளிர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சோர்வான அல்லது சிவந்த கண்களுடன் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் தென்படும் சில சிறுவர்களுக்கு  பெரும்பாலும் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் சிறுவர்கள் வீட்டில் வைத்திருக்கப்பட வேண்டும். சுகயீனம் மேலும் நீடித்தால் மருத்துவரை அணுகுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

#SRiLankaNews

Exit mobile version