மர்மப்பொருள் வெடிப்பு! – கோப்பாயில் இருவர் காயம்

image a294229934

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிரமதானத்தின் போது மர்ம பொருளொன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கோப்பாய் – கைதடி வீதி ஓரங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்து மரம் நடும் செயற்றிட்டத்தை நீர்வேலி பகுதியை சேர்ந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மேற்கொண்டு இருந்தனர்.

அதன் போது மர்ம பொருளொன்று வெடித்ததில் சிரமதான பணியில் ஈடுபட்டு இருந்த இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version