சடலங்கள் மீட்பு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தந்தை, மகன் மர்மச் சாவு! – தண்ணீர்த் தொட்டியிலிருந்து சடலங்கள் மீட்பு

Share

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பைப் பார்வையிட வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளதுடன் பிற்பகல் 2 மணியாகியும் வெளியே வராத காரணத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே சென்று அவதானித்தபோது தண்ணீர்த் தொட்டியில் இருந்து குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த குடும்பஸ்தர் இறப்பர் தொழிற்சாலையின் நிர்வாகத் தர அதிகாரியாவார்.

தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அதன் பாதுகாப்பு குறித்து விசாரிக்க அவர் அங்கு வந்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது.

தொழிற்சாலைக்குத் தண்ணீர் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட தொட்டியில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் காலி – அக்மீமன பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...