பொலிஸ்மா அதிபர் உடன் பதவி விலக வேண்டும்! – பெரமுனவினர் வலியுறுத்து

d007daa15e3caa7f952776d97baf7d35 XL

நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க தவறிய பொலிஸ்மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன், பொலிஸ்மா அதிபர்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளையும் தொடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று (14) நடைபெற்றது.

சுமார் 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மஹிந்த ராஜபக்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ச கடந்த 10 ஆம் திகதி முதல் இன்றுவரை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைமறைவாகவே வாழ்கின்றார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை, அதனால் ஏற்பட்ட தாக்கங்கள், புதிய அரசு, நாடாளுமன்ற அமர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்க, பொலிஸ்மா தவறிவிட்டார், முன்கூட்டியே பாதுகாப்பு பொறிமுறையை வகுக்க தவறிவிட்டார், என அவருக்கு எதிராக சரமாரியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

#SriLankaNews

Exit mobile version