25 6848dbafc13cc
இலங்கைசெய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் – தமிழரசு கட்சி ஒப்பந்தம் : சாணக்கியன் விளக்கம்

Share

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் போட்டியிட்ட அனைத்து சபைகளிலும் தவிசாளர் பதவி எங்கள் கட்சிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

நாங்கள் சிறுபான்மையாக இருக்கும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எங்களுடைய உறுப்பினர்கள் தான் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள்.

தேர்தலுக்கு முன்பாக நாங்கள் கூறியதற்கு இணங்க மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எங்களுடைய உறுப்பினர்கள் வெற்றியடைந்திருக்கின்றார்கள்.

நாங்கள் சில சபைகளில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

குச்சவெளி, மூதூர் போன்ற சபைகளிலே 40 சதவீதமான தமிழர்களும் 60 சதவீதமான முஸ்லிம்களும் உள்ள மூதூர் சபையில் தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது.

யாழ். மாநகர சபையில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்கியதாக எங்களுடைய கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் விமர்சித்திருக்கின்றனர்.

அதேநேரம், 60 சதவீதமான முஸ்லிம்கள் வாழும் மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...