16 3 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை

Share

இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவருக்கும் இலங்கை தூதரகத்தில் இன்று புதன்கிழமை (13.03.2024) நோ்காணல் நடைபெற்று வருகின்றது.

மூவரும் அழைத்துச் செல்வதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்து வாழ விரும்புகிறோம்.

எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா்.

இதன்படி இன்று திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...