கோடரியால் தாக்கி ஒருவர் படுகொலை 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்கரைப்பற்றில் கோடரியால் தாக்கி ஒருவர் படுகொலை!

Share

அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சின்ன முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 33 வயதானவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த குறித்த நபர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின்போது சந்தேகநபரும் காயமடைந்துள்ள காரணத்தால், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...