கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் கொலை!

கத்திக் குத்து tamilnaadi 1

வாக்குவாதத்தில் நபர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் கனேமுல்ல, கெந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலையைச் செய்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரும் காயமடைந்திருந்ததால் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version