முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், வீதியால் சென்றவர்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது.

அத்துடன் வீதியால் வருகை தந்த விசேட அதிரடிப்படையினருக்கும் அங்கு நின்ற புலனாய்வாளர்களுக்கும்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.

VideoCapture 20220512 114955

#SriLankaNews

Exit mobile version