யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்பட்டது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால்நினைவுகூரப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த மாணவனால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால் சுடரேற்றப்பட்டு
மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG 20220518 WA0026

#SriLankaNews
Exit mobile version