முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூர்ந்து கொழும்பில் அஞ்சலி

images 2 2

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூர்ந்து கொழும்பில் அஞ்சலி

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பில் இன்றையதினம் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வினை நடத்தியிருந்தனர்.

வெள்ளவத்தை கடற்கரையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதோடு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

இதன்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

மேலும், இதில் இன மத பாகுபாடின்றி தமிழ் மற்றும் சிங்கள சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version