முல்லைத்தீவு – தனியார் ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

image ce4218b4c0

முல்லைத்தீவு – தனியார் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலில் பணியாற்றி வரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி முதல் இவரை காணவில்லை என முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

#SriLankaNews

 

Exit mobile version