முகமாலை விபத்து! – 47 பேர் காயம்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது.

கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேரூந்துடன், பின்னால் பயணித்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

முகமாலையில் அமைந்துள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் halo trust நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி பயணித்த பேரூந்து திரும்ப முற்பட்ட வேளையே விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ் போதனா வைத்தியசாலையில் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG 20221015 WA0021

#SriLankaNews

Exit mobile version