இலங்கைசெய்திகள்

அர்ச்சுனா எம்.பியின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் : சபாநாயகர் அறிவிப்பு

Share
17 18
Share

அர்ச்சுனா எம்.பியின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் : சபாநாயகர் அறிவிப்பு

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் (Ramanathan Archchuna) சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல (Ashoka Ranwala) தெரிவித்துள்ளார்.

அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை நேற்று (24) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகரினால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்ட போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முடியாது.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும்.

அர்ச்சுனா கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது. எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார்.

அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை. எனவே, அவரது சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

தற்போது வாகனம் மற்றும் இல்லங்களை எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரவில்லை. எனினும், தூரப் பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில சமயங்களில் பல நாட்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

எனவே, தூரத்தின் அடிப்படையில் குறித்த வசதிகளை வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆகவே, தகுதியானவர்கள் இனங்காணப்பட்டுக் குறித்த வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்“ என தெரிவித்தார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...