ஓமானில் மலையகப் பெண்களும் விற்பனை!

airport istock 969954 1617465951

சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக தொழிலுக்குச் அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சில பெண்களும் ஓமானில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக அகில இலங்கை முற்போக்கு சேவையாளர் முன்னணி சங்கத்தின் தலைவர் எஸ்.பி. இளங்கோ காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையால் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த அதிகளவான பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் நிலையில், ஓமானுக்கு பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 25 பெண்கள் சென்றுள்ளதுடன், இதில் சிலர் பாலியலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version