மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து!

download 10 1 7

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து!

மொனராகலை, தம்பகல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பகல்ல-மாரியாராவ பிரதான வீதியின் 7 இலக்க கட்டைப் பகுதியில் மாரியாராவ நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த நபர் தம்பகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 23 வயதுடைய மாரியாராவ, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

விபத்து தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#srilankaNews

 

Exit mobile version