பட்டப்பகலில் கடத்தப்பட்ட தாயும் இரண்டு பிள்ளைகளும்
இலங்கைசெய்திகள்

பட்டப்பகலில் கடத்தப்பட்ட தாயும் இரண்டு பிள்ளைகளும்

Share

பட்டப்பகலில் கடத்தப்பட்ட தாயும் இரண்டு பிள்ளைகளும்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி செல்லும் கலனிகம நுழைவாயிலில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளை கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு கடத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

37 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 7 மற்றும் 15 வயதுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.

முதல் திருமணத்தில் பெண்ணின் கணவர் இறந்துவிட்ட நிலையில், சில காலம் வேறு ஒருவருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரைப் பிரிந்த பெண், இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அவர்கள் காலி தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்தனர். எனினும் இவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் பண்டாரகம பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மற்றுமொரு நபருடன் காரில் வந்த சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்து, அவரை அச்சுறுத்தி கடத்திச் சென்றுள்ளார்.​​

கலனிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் கார் நிறுத்தப்பட்டவுடன், அந்த பெண் காருக்குள் இருந்து ‘என்னை காப்பாற்றுங்கள்’ என சத்தமிட்டுள்ளார்.

அப்போது கலனிகம அதிவேக வீதி நுழைவாயிலில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் சுஜீவ உடனடியாகச் செயற்பட்டு காரை நிறுத்தி சோதனையிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் பண்டாரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காரை சோதனையிட்டபோது, ​​அதில் பெரிய கத்தி ஒன்றும் சிக்கியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...