பதினெட்டு வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட குற்றத்தின் பெயரில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்பாணம் – மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இவ் இளம் வயது பெண் அவரது தாயாருடன் இணைந்து பச்சிளம் குழந்தையை உயிருடன் நிலத்தில் புதைக்க மறைமுகமாக முயற்சி செய்துள்ளனர்.
இவர்களின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்ட ஊர் மக்கள் சிலர் குறித்த இடத்திற்கு சென்று அவர்களின் செயற்பாடுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளை உடனடியாக தகுந்த நேரத்தில் குழந்தையை அவர்களிடம் இருந்து காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துளனர்.
ஓப்படைக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த பெண் மற்றும் அவரின் தாயார் இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment