வத்தளை, ஹெந்தலை – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனைத் தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரைத் துறக்க முயன்ற தாய் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வத்தளை, ஹெந்தலை – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனைத் தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரைத் துறக்க முயன்ற குறித்த பெண் வத்தளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்தப் பெண் நேற்றிரவு 7.30 மணியளவில் தனது மகனைத் தள்ளிவிட்டு, ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, வீதியால் பயணித்த நபர் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தியிருந்தார் .
இதையடுத்து, அவர் ஹெந்தலை காவலரணில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் வத்தளைப் பொலிஸாரால் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனைக் கண்டுபிடிக்க படகுகள் மூலம் கடற்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.
#SriLankaNews

