20230416 134302
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அன்னை பூபதியின் 35வது நினைவுதின ஊர்திப்பவனி!

Share

அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊர்தி பவனியானது இன்று (16) நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நிவைிடத்திலிருந்து நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பித்தது.

இவ் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார், கயேந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

இதேவேளை இன்றைய தினம் நல்லை ஆதீன முன்றலில் தமிழர் தொன்மையைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்ட இடத்தை நோக்கி நகர்ந்த ஊர்திக்கு

போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சைவ மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் போன்றோர் அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.

தொடர்ந்து நகரும் ஊர்திபவனியானது யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து கண்டி நெடுஞ்சாலையூடாக கிளிநொச்சியைச் சென்றடைந்து, அங்கிருந்து மாங்குளம் மல்லாவியூடாக நெடுங்கேனியை அடைந்து, அங்கிருந்து திருகோணமலையூடாக மட்டக்களப்பிலுள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தை எதிர்வரும் 19ம் திகதி சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய முதலாம் நாள் பவனியானது முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியோடு நிறைவடையவுள்ளது.

20230416 140000 20230416 133937
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...