மரம் வெட்டச் சென்ற 100 இற்கும் மேற்பட்டோர் கைது!

கைது

சோமாவதி வனப்பகுதியின் அக்போபுர – திவுல்கஸ்வெவ பகுதியில் மரம் வெட்டச் சென்ற 100 இற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

16 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் வருகை தந்த 7 டிரக்டர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

காடழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நாளை (27) கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version