மக்கள் நாட்டை விட்டு செல்வார்கள்! உலக வங்கி எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

மக்கள் நாட்டை விட்டு செல்வார்கள்! உலக வங்கி எச்சரிக்கை

Share

மக்கள் நாட்டை விட்டு செல்வார்கள்! உலக வங்கி எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு மற்றும் நோபாளம் நாடுகளுக்கான பணிப்பாளர் பொரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“பொருளாதார நெருக்கடி நிலைமையானது தொடர்ந்தும் உக்கிரமடைந்தால், நாட்டு மக்கள் அதிகளவில் நாட்டை கைவிட்டு செல்வார்கள்.

பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்கள் தமது பிள்ளைகளின் பாடசாலை கல்வியை நிறுத்தி விடுவார்கள்.

தமது வர்த்தகத்தை முன னெடுக்கும் நோக்கில் நிறுவனங்கள் சொத்துக்களை விற்க நேரிடும்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் நீண்டகால வசதிகளை பெற்றுக்கொள்ள முடிந்தமை, தேசிய கடனை மறுசீரமைப்பதற்காக நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்டமை, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் சர்வதேச நிதியுதவியை பெற்றுக்கொள்ள முடிந்தமை போன்ற நிலைமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு வாழ்த்து கூறுகிறேன்.

சிறந்த பிரதிபலனை எதிர்பார்க்கும் பலமான மறுசீரமைப்பை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய கடினமான மற்றும் அத்தியாவசியமான மறுசீரமைப்பு அவசியம். இதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன்.”என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...