மன்னார் நகர் பகுதியில் மீன் சந்தைக்கு அருகிகே உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவு மழை காரணமாக மின்சாரம் சிறிது நேரம் தடைப்பட்டிருந்த வேளையில் குறித்த கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு வியாபார நிலையத்தில் வைக்கப்பட்ட ஒரு தொகை பணமும் திருடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் மன்னார் பொலிஸாருக்கு தெரிவிக்கக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.