இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுவரித் திணைக்களத்திற்கு இடையில் ஒப்பந்தம்
இலங்கை மத்திய வங்கியில், இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவும், இலங்கையின் மதுவரித் திணைக்களமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களைக் தடுக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.
இந்த ஒப்பந்தம், நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்ட விதிகளின் கீழ், விசாரணைகள் மற்றும் வழக்குகளுக்காக, இரண்டு நிறுவனங்களுக்கிடையில் தகவல் பகிர்வை பலப்படுத்துகிறது.
முன்னதாக, 2008ஆம் ஆண்டு முதல் இலங்கை நிதிப்புலனாய்வுப் பிரிவு, சர்வதேச நாடுகளுடன் 44 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும், இலங்கையின் சுங்கம், குடிவரவு, உள்நாட்டு வருமானம் மற்றும் பொலிஸ் உட்பட உள்நாட்டு நிறுவனங்களுடன் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது.
இந்தநிலையில் நிதிப்புலனாய்வு பிரிவு மற்றும் மதுவரித் திணைக்களத்திற்கு இடையிலான இந்த கூட்டு முயற்சி, இலங்கையின் நிதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் நிதிக் குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.