25 684ea12d968ab
இலங்கைசெய்திகள்

படப்பிடிப்பிற்காக இலங்கை இந்திய நடிகர் மோகன்லால் கூறிய விடயம்

Share

இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதன்(Mohanlal) மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக இன்று(15) இலங்கை வந்துள்ளனர்.

“பேட்ரியட்” (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இன்று (15) இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

இந்த திரைப்படம் இந்தியாவின் எட்டு மொழிகளில் Pan-India திரைப்படமாக வெளியாகும் வகையில் தயாராகி வருகிறது.

இந்த மிக முக்கியமான திரைப்படத்தில் மோஹன்லால், மம்முட்டி, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ஜரின் ஷிஹாப் மற்றும் ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இருவரும் இன்று காலை 11.20 மணிக்கு, இந்தியாவின் கொச்சியிலிருந்து UL-166 என்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா வந்தடைந்தனர்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் திரைப்பட சுற்றுலா பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகள், இந்த நிகழ்வை விளம்பர நோக்கில் சிறப்பித்துப் பாராட்டுவதற்காக விமான நிலையத்தில் வரவேற்க வந்திருந்தனர்.

இந்தநிலையில், “இலங்கை படப்பிடிப்புக்கு மிக சிறந்த இடங்களை வழங்குகிறது. வேலை செய்ய மிகவும் நட்பான இடம்.

இலங்கைக்கு வருகை தருவதை நான் மிகவும் விரும்புகின்றேன். மேலும் எனது எதிர்காலத் திட்டங்களுக்கும் இங்கு படப்பிடிப்பைத் திட்டமிட்டு வருகிறேன்.

சினிமாவுக்கான புதிய அமைப்புகளுடன் கூடிய அழகான இடமாக இது இருக்கின்றது என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்ட படப்பிடிப்பை முடிக்க மோகன்லால் சுமார் 10 நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதுடன் இதற்கு முன்பு, முதலாவது கட்ட படப்பிடிப்புக்காக அவர் சுமார் ஆறு நாட்கள் இலங்கையில் இருந்தமை குறி்ப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...