1 12
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Share

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்ப

அரைகுறையாக நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி.பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கருத்திட்டத்தின் கீழ் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கத்தின் திட்டத்தின்படி மூன்று கிலோமீட்டர் எல்லைக்குள் அனைத்து மாணவர்களும் சென்று கல்வி கற்கக்கூடிய ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவது எமது நோக்கம்.

அதுபோன்ற பல பாடசாலைகளை இணைத்து முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாம் அவற்றை ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை.

அவ்வாறான அனைத்து பாடசாலைகளும் மீளாய்வு செய்யப்பட்டு 80 வீதமாக அல்லது 90 வீதமாக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அந்த கட்டடங்களுக்கான நிர்மாண பணிகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கருத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட பல பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் 50 விதமாகவும் 75 வீதமாகவும் இடையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

மேற்படி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...