இன நலனுக்காக நல்லூர் ஆலய சூழலில் அணிதிரளுங்கள்!! – த.தே.ம.மு அழைப்பு

20220127 100122

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் திரட்சியையும் பேரணியையும் குழப்புவதற்காக பொய்ப் பிரசாரங்கள் நன்கு கச்சிதமாக திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம் இந்த ஊடக சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்ட நேரம் முதல் பல்வேறுபட்ட சதி முயற்சிகள்,
இடம்பெறுவதாக நம்பகரமாக நாம் அறிகின்றோம்.

ஆகவே பொதுமக்கள் எங்கள் அறிக்கைகளை அவதானித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். போலிப் பிரசாரங்களை கருத்தில் எடுக்கக்கூடாது.

இந்த விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். பேரணி கைவிடப்பட்டதாக கூட பொய்யான செய்திகள் பரப்பபடலாம். ஆகவே திட்டமிட்ட வகையில் எமது போராட்டம் இடம்பெறும்.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய அனைவரும் குறைந்தபட்சம் 2 மணி வரையாவது உங்கள் வியாபார வர்த்தக செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி எங்களது பேரணிக்கு பூரணமான ஆதரவை வழங்க வேண்டும்.

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி காலை 9.30மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version