யாழில் காணாமல் போன சிறுமி கிளிநொச்சியில் மீட்பு!

Missing

யாழ்ப்பாணத்தில் காணாமல்போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் சிறுமி,கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பான நகரப் பகுதிக்கு தனது தேவைக்காக சென்றவேளை கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாரென சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி குறித்த சிறுமியின் உறவினர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,நாம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் இது பற்றி முறைப்பாடு அளித்த போதும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தற்போது வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை தெரிவித்தோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்
– என்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version