முகநூலால் சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்!

download 16 1 5

முகநூலால் சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்!

தம்புள்ளை பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி, தனது முகநூல் பக்கத்தில் இளைஞனுடன் தொடர்பை ஏற்படுத்தி காதலில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவனது வீட்டிற்கு வந்த போது, ​​மனிதாபிமானமற்ற பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் கதிர்காமம் காவல்துறையினரால் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

சிறுமியை கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் 27 வயதுடைய நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இந்த சிறுமியிடம் கணவன்-மனைவியாக வாழ முன்வந்தபோது, ​​அவர் மறுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உடலுறவு கொள்ள மறுத்ததால் கடும் கோபமடைந்ததாக கூறப்படும் சந்தேகநபர், வெற்று பீர் போத்தலை சிறுமியின் உடலில் செருகி கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, சந்தேக நபர் சிறுமியின் கழுத்தை நெரித்து ,இரத்தம் வரும் வரை மூக்கில் வாயை வைத்து சித்திரவதை செய்ததாக சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை 119 அவசர அழைப்புப் பிரிவிற்கு செய்யப்பட்ட அறிவித்தலின் பேரில் கதிர்காமம் காவல்துறை அதிகாரிகள் குழு சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்து சிறுமியை காவலில் எடுத்தனர்.

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்று வந்த இந்த சிறுமி முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை பார்த்திராத இவருடன் தனது பெற்றோருக்கு தெரிவிக்காமல் இரகசியமாக தப்பிச் சென்றதாக சிறுமி காவல்துறையினரிடம் மேலும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

#srilankaNews

Exit mobile version