எனக்கும் அமைச்சு பதவி – கூறுகிறார் எஸ்.பி. திஸாநாயக்க

79d38885 sb 1

” 1994 இல் இருந்து அமைச்சு பதவிகளை வகித்தவன் நான், எனவே, அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்று சிறப்பாக செயற்படுவேன்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

” இந்த அரசாங்கத்தில்  ஜனாதிபதி, பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள சிரேஷ்ட அரசியல்வாதி நான். எனவே, எனக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என நம்புகின்றேன்.  தகுதியானவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும். இராஜாங்க அமைச்சு நியமனத்தில் அதனை காண முடியவில்லை.” – எனவும் எஸ்.பி. குறிப்பிட்டார்.

#srilankanews

Exit mobile version