1 1 22
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய சுற்றறிக்கை

Share

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய சுற்றறிக்கை

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையானது கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவினால் (Nalaka Kaluwewa) வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் (ஆரம்ப வகுப்புக்கள் நடைபெறும் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள்) ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த சுற்றறிக்கையில் முக்கிய விடயங்களாக பின்வருவன தெரிவிக்கப்பட்டுள்ளது, 2025ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பித்தல் பாடசாலைகளில் 2025ம் ஆண்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தாம் ஒன்றிற்கான வகுப்புக்கள் 2025.01.30 வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2025ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக “பிள்ளைகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டம்” 2025.01.31 வெள்ளிக் கிழமையன்று ஆரம்பிக்கப்பட்டு 2025.02.17 செவ்வாய்கிழமை வரையில் 10 நாட்களில் நிறைவு செல்லுவேண்டும்.

இக்காலத்தை உச்ச அளவில் பயன்படுத்தி மிகவும் நம்பகத் தன்மையுடன் கூடியதாக “பின்ளைகளை இளங்காணும் நிகழ்ச்சித்திட்டம்” நடைமுறைப்படுத்துவது அனைத்து அதிபர்களினதும் பொறுப்பாகும் என்பதை தயவாக அறியத்தருகின்றேன் என்றுள்ளது.

Share
தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...