” ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சானது, பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடமே ஒப்படைக்கப்படும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய சுதந்திரத்துக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தற்போது அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர். அந்த நாடகத்தில் பாத்திரமேற்று நடிப்பதற்கு நாம் தயாரில்லை எனவும் சஜித் குறிப்பிட்டார்.
#SriLankaNews