கமால் குணரத்ன
அரசியல்இலங்கைசெய்திகள்

புலிகள் தாக்குவார்களா? – பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

Share

மே மாதம் 18ஆம் திகதியன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒருங்கிணைந்து இலங்கை மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவு, இந்தியப் புலனாய்வுப் பிரிவிடம் வினவியுள்ளது என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இந்தத் தாக்குதலை நடத்துவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திட்மிடப்பட்டுள்ளது எனக் கடந்த 13ஆம் திகதி ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியப் புலனாய்வுத் தகவல்களை குறிப்பிட்டே அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது வழமையான புலனாய்வுத் தகவல் என இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தத் தகவல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல் கிடைக்கும் பட்சத்தில் அதனை அறிவிப்பதாகவும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு, இலங்கைப் புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் வௌியிட்டுள்ள இந்தத் தகவல் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் உரிய முறையில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்து பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 1
இலங்கைசெய்திகள்

கந்தப்பளை விவசாயப் பேரழிவு: வெள்ளத்தால் 100% பயிர்ச்சேதம் – உடனடி நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால்...

1689312026 state employees sri lanka L
இலங்கைசெய்திகள்

அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளமற்ற விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்!

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சம்பளமற்ற விடுமுறைகளை (No-Pay Leave) அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு...

25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...