பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி

z p01 Parliament

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் மூன்று பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சீதா அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும், கீதா குமாரசிங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சராகவும், டயானா கமகே சுற்றுலா இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

#SriLankaNews

Exit mobile version