images 13 3
இலங்கைஅரசியல்செய்திகள்

3,000 சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை: புதிய நடைமுறை மூலம் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை!

Share

இலங்கையில் உள்ள நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இந்தச் சிறுவர்களை முறையான பாடசாலைக் கல்வியில் இணைப்பதிலும், அவர்கள் 18 வயதிற்குப் பிறகு வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன.

போதைப்பொருள் பழக்கம், பாலியல் வன்முறை, குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டமை அல்லது வீதிகளில் கைவிடப்பட்டமை போன்ற காரணங்களால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இவர்கள் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் விபரங்கள் அறியப்படாத நிலையில் உள்ளனர்.

இந்த நெருக்கடிக்குத் தீர்வாகப் பதிவாளர் நாயகம் திணைக்களத்துடன் இணைந்து புதிய நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளது. குழந்தையின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு வயது தீர்மானிக்கப்பட்டுப் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

பெற்றோர் விபரங்கள் இல்லாத பட்சத்தில், அந்தந்த மாகாண நன்னடத்தை இல்ல ஆணையாளரின் பெயர் பாதுகாவலராகப் பயன்படுத்தப்படும்.

தற்போது இலங்கையில் உள்ள 46 அரச இல்லங்கள் மற்றும் 308 தனியார் இல்லங்களில் மொத்தம் 9,191 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 3,000 சிறுவர்களுக்கு விரைவாகப் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் பணிகளை அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...