MediaFile 18
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: சீனாவிடம் அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

Share

இலங்கை முழுவதும் மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கு உதவுமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (29) முற்பகல் வெளிவிவகார அமைச்சில் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது நாட்டின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்துப் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

சீனா உள்ளிட்ட உலகச் சந்தையிலிருந்து இலங்கை அதிகளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களைச் சீன அரசாங்கத்தின் நன்கொடையாக நிறுவுவதற்கு அமைச்சர் முன்மொழிந்தார்.

எதிர்காலத்தில் அதிகளவிலான மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த தொடருந்து பாதைகள் மற்றும் பாலங்களை விரைவாகப் புனரமைக்கச் சீனாவின் ஆதரவு கோரப்பட்டது.

அமைச்சரின் முன்மொழிவுகளை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட சீனத் தூதுவர், இது குறித்துத் தனது அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதாக உறுதியளித்தார். மேலும், ‘டிட்வா’ (Titli) சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு, அனைத்துத் துறைகளிலும் சீனா வழங்கக்கூடிய உதவிகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...