பால், தேநீர் விலைகள் குறைப்பு!

TEA

பால், தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 90 ரூபாவாக குறைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாளை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version