நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனை கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் காணப்படுகின்ற பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கொரோனாப் பரவல் காரணமாக நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளூர் சந்தைகளில் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .
மேலும் இறக்குமதியில் காணப்படுகின்ற சிக்கல்களும் இதற்குக் காரணமாக அமைகின்றது.
இதனால் நாட்டில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கென கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment