6 28
இலங்கைசெய்திகள்

நாட்டில் சுகாதார நிபுணர்களின் இடப்பெயர்வு: உலக சுகாதார நிறுவனத்திடம் அறிவித்த இலங்கை

Share

சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து, இலங்கையின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கவலையை வெளியிட்டுள்ளார்.

இது நாட்டின் சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார சபையில் உரையாற்றும் போது அவர் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.

2022 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஆயிரக்கணக்கான சுகாதார நிபுணர்கள் இலங்கையை விட்டு வெளியேறி, நாட்டின் சுகாதார அமைப்புக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

726 ஆலோசகர்கள், 1116 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 2800 செவிலியர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக, தமது சொந்த சுகாதார நிபுணர்களை உருவாக்க முதலீடு செய்த பின்னர், இலங்கை குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாக நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த சுகாதார நிபுணர்களை உள்வாங்கியுள்ள நாடுகளிடமிருந்து அதிக பொறுப்புக்கூரலை அமைச்சர் கோரியுள்ளார்.

அத்துடன், சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஆட்சேர்ப்பு குறித்த உலகளாவிய நடைமுறைக் குறியீட்டை, உலக சுகாதார நிறுவனம், திறம்பட செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...