rtjy 286 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்புக்குள் நுழைந்துள்ள ஆபத்து

Share

கொழும்புக்குள் நுழைந்துள்ள ஆபத்து

காலி சிறைச்சாலையில் பல கைதிகளின் உயிரை பறித்த மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நோயாளி ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், அவர் இரத்மலானை சுகாதார மற்றும் மருத்துவ பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி குணதிலக்க தெரிவித்தார்.

இந்த நபர் பணிபுரிந்த இடத்தில் உள்ள சுமார் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் சமல் சஞ்சீவ, இந்த பக்டீரியா தொற்றுக்குள்ளான ஒருவரைக் கூட இனங்காணுவது மிகவும் அவசியமானது என தெரிவித்தார்.

நோய் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெற்றோருக்கு ஏற்படக்கூடிய தேவையற்ற அச்சத்தை நீக்கி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, முறையான திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...